சிங்கள பௌத்த சம்பத் வங்கியில் இருந்து தனது கணக்கை நீக்கிக்கொண்ட மங்கள
Wednesday, 12 Aug 2020

சிங்கள பௌத்த சம்பத் வங்கியில் இருந்து தனது கணக்கை நீக்கிக்கொண்ட மங்கள

3 July 2020 10:32 pm

தெஹிவளை சம்பத் வங்கி கிளைக்கு வருகை தந்த முஸ்லீம் பெண்ணொருவருக்கு அவரது தலை கவசத்துடன் (ஸ்காப்பை) வங்கியினுள் பிரவேசிக்க கூடாது என கூறிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியவண்ணம் உள்ளது.

அதனுடனே மீண்டும் இனவாதம் தலையோங்க ஆரம்பித்துள்ளதுடன் சில சமூக ஊடக ஆர்வலர்கள் சம்பத் வங்கி கிளையின் அதிகாரிகளையும் அவர்களின் தன்னிச்சையான நடத்தையை பாராட்ட முயற்சிக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த நாட்டின் பிரபல வர்த்தகரான நிமல் பெரேரா இந்த சம்பவம் தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றில்  "சம்பத் வங்கி சிங்கள பௌத்தருக்கு சேவை புரிவதற்காகவே உருவாக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

நிமல் பெரேராவின் பதிவிற்கு பதிலளித்த முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர, சம்பத் வங்கி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு சேவை வழங்குநர் அல்ல என்பதை அவருக்கு உணர்த்தியதற்காக நிமல் பெரேராவுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறுகிறார். இனவாதம் மற்றும்  மதவாதத்தை புறக்கணிக்கும் தான் சிங்கள பௌத்த வங்கியின் தனது கணக்கை நீக்கிக்கொள்வதாகவும் அதற்கு பதிலாக அனைத்து இலங்கையர்களுக்கும் இனம், மதம், சாதி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் வங்கியுடன் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் சமரவீர தெரிவித்துள்ளார். இதனால் சம்பத் வங்கிக்கு அந்தளவு நஷ்டம் ஏற்படாது எனவும் கொள்கைகள் தனக்கு மிகவும் முக்கியம் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

KK