நாட்டில் மீண்டும் கொரோனா அச்சம்? நேற்று 12 பேர் அடையாளம் காணல்
Friday, 14 Aug 2020

நாட்டில் மீண்டும் கொரோனா அச்சம்? நேற்று 12 பேர் அடையாளம் காணல்

3 July 2020 08:10 am

நாட்டில் மீண்டும் கொரோனா அச்சநிலை ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இதுவரை வைரஸினால் பாதிக்கப்பட்ட 2066 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

நேற்று 2ம் திகதி 12 புதிய கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதில் ஐவர் குவைட்டில் இருந்தும் ஐவர் கட்டாரில் இருந்தும் நாடு திரும்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஏனைய இருவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்பதுடன் அதில் ஒருவரே தனிமைப்படுத்தல் நிறைவுபெற்று ஜிந்துபிட்டி பிரதேச வீட்டில் தங்கியிருந்த நிலையில் வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். 

இவருடன் தொடர்பு பேணிய 160 பேர்வரை கந்தக்காடு தனிமைப்படுத்தல் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.