33 நாட்களில் தேர்தல் - மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!
Friday, 14 Aug 2020

33 நாட்களில் தேர்தல் - மேலும் சில பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

3 July 2020 07:27 am

சேவை அவசியம் கருதி பிரதி பொலிஸ் மா அதிபர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

பொலிஸ் ஆணைக்குழு மற்றும் தேர்தலில் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. 

அதன்படி பொலீஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ மெதவத்த பொலிஸ் நலநோக்கு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவின் பொறுப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் ஜீ.கே.ஜே அபொன்சு நியமிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, மேல் மாகாண வடக்கு பிரிவிற்கு பொறுப்பாக பிரதி பொலிஸ் மா அதிபர் எஸ்.பி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். அரச புலனாய்வு பிரிவின் பதில் பிரதி பொலிஸ் மா அதிபராக யு.கே.மாரம்பகே நியமிக்கப்பட்டுள்ளார்.  

பொதுத் தேர்தலுக்கு 33 நாட்கள் இருக்கும் நிலையில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

மார்ச் 2ம் திகதி பொதுத் தேர்தல் அறிவிப்பு நாள் தொடக்கம் இதுவரை பல பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சுதந்திரமான நியாயமான தேர்தலை நடத்த இது தடையாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த இடமாற்றங்களுக்கு பொலிஸ் ஆணைக்குழுவும் தேர்தல் ஆணைக்குழுவும் அனுமதி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.