டயலொக் பாவனையாளர்களை க்ரிபில் போடும் வியாபாரம்!
Monday, 10 Aug 2020

டயலொக் பாவனையாளர்களை க்ரிபில் போடும் வியாபாரம்!

2 July 2020 10:02 am

கட்டணம் செலுத்தாமல் குறை வைத்திருக்கும் டயலொக் பாவனையாளர்களை வேறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கட்டணம் செலுத்தத் தவறும் நுகர்வோரே தடை செய்வதற்காக நடைமுறைப்படுத்தப்படும் க்ரிப் திட்டத்தை செயல்படுத்த டயலொக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. 
 
இதற்காக டயலொக் நிறுவனத்திற்கு சொந்தமான நிதிநிறுவனம் ஒன்றை பயன்படுத்தி இத்திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அதன்படி டயலொக் தொலைபேசி பில் கட்டணம் மற்றும் டேட்டா கட்டணம் போன்றவற்றை செலுத்தத் தவறும் அல்லது தாமதமாகும் வாடிக்கையாளர்கள் இனி வரும் காலங்களில் கிரிப் செய்யப்படுவர்.
 
இந்த நடவடிக்கையானது இந்த நாட்டின் தொலைபேசி  பாவனையாளர்களில் உரிமைகளை மீறும் செயலாகும்.
 
தொலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பத்திரத்தில் கையொப்பம் பெற்று இதில் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி அவர்களை கஷ்டத்தில் தள்ளும் ஒரு நடவடிக்கையாக இது அமையப்போகிறது. 
 
குறித்த விண்ணப்ப படிவம் ஒரே மொழியில் மாத்திரம் அச்சிடப்படுவதால் வேறு மொழி பாவனையாளர்கள் அதுகுறித்து தெளிவின்றி கையொப்பமிடுவர். இதனால் பாரிய சிக்கல் ஏற்படுகிறது. இதேவேளை தொலைபேசி கட்டணங்களை செலுத்தாத வாடிக்கையாளர்களை கிரிப் செய்வதன் மூலம் டயலொக் நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் செயல்பாடுகளில் ஈடுபடக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.