இலங்கையில் சூரிய கிரகணத்தை காணக்கூடிய இடங்களும் நேரங்களும்
Tuesday, 11 Aug 2020

இலங்கையில் சூரிய கிரகணத்தை காணக்கூடிய இடங்களும் நேரங்களும்

21 June 2020 05:00 am

இந்த வருடத்திற்கான முதல் நெருப்பு வளைய சூரிய கிரகணம் எனும் பெயர் கொண்ட சூரிய கிரகணம் இன்று (21) நிகழவுள்ளது. 

இந்த சூரிய கிரகணம் இலங்கையில் அரை சூரிய கிரகணமாக தென்படும். சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகியன ஒரு நேர்கோட்டில் காணப்படும்போது சூரியனின் முகப்பகுதியின் ஊடாக சந்திரன் நகரும் போது ஏற்படும் நிழல் பூமியில் விழும்போது சூரியகிரணம் ஏற்படுகின்றது 

இந்த சூரிய கிரகணத்தை இலங்கை மக்கள் இன்று (21) காலை 10.23 மணியளவில் அவதானிக்க முடியுமென ஆதர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்தள்ளது.

இந்த கிரகணம் காலை 9.15 மணி முதல் 6 மணித்தியாலங்களுக்கு  நீடிக்கும்.  

இலங்கையில் சூரிய கிரகணம் தென்படும் இடங்களும் நேரமும் 

  • கொழும்பு நகரில் காலை 10.20 அளவில் காண முடியும்.
  • மேலும் யாழ்ப்பாணத்தில் காலை 10.24 அளவிலும் 
  • மாத்தறையில்  காலை 10.34 அளவிலும்  
  • திருகோணமலையில் காலை 10.31அளவிலும்
  • காலியில் காலை 10.32அளவிலும்
  • அநுராதரபுரத்தில் காலை 10.28அளவிலும்
  • கண்டியில் 10.31அளவிலும்
  • மட்டக்களப்பில் காலை 10.35அளவிலும்
  • பதுளையில் காலை 10.34அளவிலும்
  • இரத்தினபுரியில் 10.32 அளவிலும் சூரிய கிரகணத்தை அவதானிக்க முடியும்.

சூரிய கிரகணத்தை வெறுங்கண்ணால்  பார்க்கக்கூடாது என்று ஆதர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.