கொரோனாவிற்கு பலியான பிரபல பின்னணி பாடகர்
Tuesday, 11 Aug 2020

கொரோனாவிற்கு பலியான பிரபல பின்னணி பாடகர்

20 June 2020 03:39 pm

பிரபல பின்னணி பாடகாரான ஏ.எல்.ராகவன் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏ.எல்.ராகவன் அவர்கள் தனது 87வது வயதில் உயிரிழந்துள்ளார்.

"எங்கிருந்தாலும் வாழ்க" பாடல் மூலம் மிகவும் பிரபலமான  ஏ.எல்.ராகவன் திடீர் உடல்நலக் குறைவால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். 

இவர் 1950 தொடக்கம் 1970 வரையான காலப்பகுதியில் தமிழ் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.