தேர்தல் குறித்து இறுதி தீர்மானம் 08ம் திகதி !
Sunday, 05 Jul 2020

தேர்தல் குறித்து இறுதி தீர்மானம் 08ம் திகதி !

3 June 2020 11:39 pm

பொது தேர்தல் நடத்துவதற்கான திகதி தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 08ம் திகதி திங்கட்கிழமை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (03) முடிவு செய்துள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (03) கூடியதுடன் அந்த கூட்டத்தின் பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஆணைக்குழுவின் தலைவர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.

மேலும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டிக்கு அமைய குறித்து மாவட்ட உதவி தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுடன் கலந்துரையாடி தேர்தலை நடத்துவதற்கான திகதி தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.