அவுஸ்டேலியாவில் இருந்து பசுக்களை கொண்டுவருவது கமிஷன் அடிக்க - ரத்ன தேரர்
Friday, 24 Sep 2021

அவுஸ்டேலியாவில் இருந்து பசுக்களை கொண்டுவருவது கமிஷன் அடிக்க - ரத்ன தேரர்

3 June 2020 05:19 pm

அவுஸ்டேலியாவின் பசுக்களை இலங்கையின் பல பகுதிகளில் வளர்க்க முடியாது என்றும், கோடி ரூபாய் கணக்கு செலவில் 2500 பசுக்களை நாட்டிற்கு இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்திருப்பது கமிஷன்களை பெற்றுக்கொள்ளும் சுயநல நோக்கத்தினால் தான் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.


"விசேடமாக இந்த பசுக்கள் ஜர்சி வகையை சேர்ந்தவை. எங்கள் நாட்டின் பல பிரதேசங்களில் அந்த பசுக்களை வளர்க்க முடியாது. நாங்கள் பிரேசில், ஆப்பிரிக்க, இந்திய மற்றும் பாகிஸ்தான் பசுக்களை தான் இறக்குமதி செய்ய வேண்டும். 

இது போன்ற முட்டாள்தனமான அரசாங்கம்!  இது திருடுவதற்கு ஒப்பானது. கமிஷன் அடிப்பதற்கு இருக்கும் பேராசையை பாருங்கள்! " என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேரர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக கடும் குற்றச்சாட்டை முன்வைக்கும் ரத்ன தேரர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கோட்டாபய ராஜபக்ஷவை  வெற்றியடைய செய்ய கடுமையாக உழைத்தவராவார்.