தனிமைப்படுத்தலுக்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச ஆணுறை
Monday, 10 Aug 2020

தனிமைப்படுத்தலுக்கு பிறகு வீடு திரும்புபவர்களுக்கு விநியோகிக்கப்படும் இலவச ஆணுறை

3 June 2020 02:26 pm

இந்தியாவில் பீகார் மாநிலத்தில் இருக்கும்  தனிமைப்படுத்தல் நிலையங்களில் , 14 நாட்கள் தனிமைபடுத்தலுக்கு பிறகு, வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, பீகார்  அரசு, இலவச ஆணுறைகளை வினியோகித்து வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பணியாற்றி வந்த, 28 முதல், 29 லட்சம் வரையிலான தொழிலாளர்கள், சிறப்பு ரயில் மற்றும் பஸ்கள் மூலம், சமீபத்தில், சொந்த மாநிலமான, பீகாருக்கு  அழைத்து செல்லப்பட்டனர். 

அங்கு, தனிமைப்படுத்தல்  நிலையங்களில் , 14 நாட்கள் தங்க வைக்கப்பட்ட பின், வீடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். 

இதுவரை, 8.77 லட்சம் தொழிலாளர்கள், தனிமை முகாம்களில் இருந்து, வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். மேலும், 5.30 லட்சம் தொழிலாளர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வீடு திரும்பும் தொழிலாளர்களால், எதிர்பாராத கர்ப்பங்கள் அதிகரிப்பதை தவிர்ப்பதற்காக, தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, தொழிலாளர்களுக்கு இலவச ஆணுறை வழங்கும் திட்டத்தை, பீகார்  அரசு ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய தனிமைப்படுத்தல் நிலையங்களில்  இருந்து வீடு திரும்பும் தொழிலாளர்களுக்கு, தலா இரண்டு, 'பாக்கெட்' ஆணுறைகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

தொழிலாளர்களின் வீடுகளில், கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும், சுகாதாரப் பணியாளர்களும், இலவச ஆணுறைகளை விநியோகித்து வருகின்றனர்.

இதற்கமைய தனிமைப்படுத்தல் நிலையங்கள்  செயல்படும் வரை, இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என, பீகார் மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.