இலங்கையில் பதிவான 10வது கொரோனா மரணம்
Thursday, 02 Jul 2020

இலங்கையில் பதிவான 10வது கொரோனா மரணம்

25 May 2020 06:27 pm

இலங்கையில் கொரோனா வைரஸினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10ஆக  உயர்வடைந்துள்ளது.

குவைட் நாட்டில்  இருந்து இலங்கை வந்த பின்னர் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த பெண் ஒருவரே இன்று இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்  தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த நிலையில்  திடீரென உயிரிழந்துள்ளார்.

இவருடன் இருந்த பெண்களுக்கு கொரோனா இருப்பதாக நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த பெண் இன்று திடீரென உயிரிழந்துள்ளார். இவர் உயிரிழந்ததற்கான காரணம் கொரோனா வைரஸ் என பரிசோதனைகளின் பின்னரே தெரியவந்துள்ளது.

களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 51 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.