பொதுவாக திருமணம் என்பது ஆயிரக்கணக்கான உறவுகள் நண்பர்கள் ஒன்றிணைந்து விமர்சியாக கொண்டாடும் நிகழ்வு ஆகும். பலர் கோடி கணக்கில் கொட்டி திருமணத்தை நடத்துவார்கள். சிலர் வாழ்க்கையில் திருமணமே கேள்வி குறி.
இந்த வருடத்தில் பலர் தமது திருமண நிகழ்வுகளை நடத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக பலரது திருமணம் இடைநிறுத்தப்பட்டது. சிலர் வாட்ஸாப் வைபர் மூலம் திருமணத்தை நடத்திக்கொண்டதை நாம் சமூக வலைதளத்தில் கண்டோம்.
இந்த நிலையில் இலங்கையில் திருமண வைபவத்தில் கலந்துகொள்வோரின் எண்ணிக்கை 100 பேருக்கு வரையறுக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.
திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என்று சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் வைபவங்களின் போது முக கவசம் அணிவதும் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகைய சந்தர்ப்பத்தை இனி அனைவரும் பயன்படுத்திக்கொள்ள அறியவாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த கொரோனா காலத்தில் திருமணம் செய்பவர்களுக்கு செலவில்லாமல் சிக்கன முறையில் திருமணங்களை நடத்திக்கொள்ளலாம்.
இனி என்ன திருமணம் செய்ய எண்ணுபவர்களின் காட்டில் மழை தான்.
2021-01-15 23:51:00
2021-01-15 23:46:00
2021-01-15 20:51:00
2021-01-15 17:29:00
2021-01-15 15:30:00