’’தேசிய தொலைக்காட்சி’’ ஆக மாற்றமடைந்த ’’தெரணவிற்கு’’ எமது வாழ்த்துக்கள் !
Tuesday, 11 Aug 2020

’’தேசிய தொலைக்காட்சி’’ ஆக மாற்றமடைந்த ’’தெரணவிற்கு’’ எமது வாழ்த்துக்கள் !

19 April 2020 11:19 am

இந்த நாட்களில் நமது நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் பேசும் பொருளாக இருப்பது கொரோனா வைரஸ் தொற்று நோய் குறிப்பதே. ஒவ்வொரு விதத்திலும் தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் இந்த தொற்றுநோய்களின் சமீபத்திய தகவல்களுக்காக மக்கள் காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொடர்பாக அரச அதிகாரிகள் வழங்கிய தகவல்களை தவிர வேறு தகவல்களை வழங்குவது சட்டவிரோதமானது. அதேபோல் அரசின் உத்தியோகபூர்வ தகவல்களைத் தவிர வேறு எதையும் ஊக்குவிக்கும் எவரும் அவர் அரசாங்க ஆதரவாளராக இல்லாவிட்டால் காவல்துறையினரால் கைது செய்யப்படுவார். அரசின் சார்பாளர்கள் அவ்வாறு கைது செய்யப்படமாட்டார்கள் என வியத்மக வைத்தியர் பாலித ராஜபக்ஷ தொடர்பான சம்பவம் ஒன்றின் மூலம் அரசாங்கம் நிரூபித்தது.

எவ்வாறாயினும் இது அதைப்பற்றிய கதை அல்ல. தகவல்களை தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ள நிலைமையை பற்றியது.

அரசின் உத்தியோகபூர்வ தகவல்களை மட்டும் மக்களினால் அணுக வேண்டும் எனின் அவ்வாறு உத்தியோகபூர்வ தகவல்களை மக்களுக்கு வழங்கும் 24 மணிநேர சேவையில் உள்ள உடனடி செய்திவழங்குனர் ஒருவர் அரசாங்கத்திடம் இருக்க வேண்டும்.  குறைந்த பட்சம் சுகாதார அமைச்சின் வலைத்தளத்திலிருந்தோ அல்லது அரசாங்க அதிகாரப்பூர்வ செய்தி வலைத்தளத்திலிருந்தோ குறைந்தது 24 மணிநேரம் உத்தியோகபூர்வ செய்திகள் வழங்கப்பட வேண்டும். ஆனால் அது நடக்காது என்று அனைவருக்கும் தெரியும். அரசாங்க அதிகாரப்பூர்வ வலைத்தளங்கள் இரவில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்கள் பற்றிய தகவல்களை உடனடியாக வழங்குவதில்லை.

இத்தகைய சுற்றுச்சூழலில் கடந்த சில நாட்களாக பதிவாகிய நோயாளர்கள் குறித்து தகவல்கள் மற்றும் காலையில் நடைமுறையாகும் ஊரடங்கு தொடர்பான முடிவுகள் குறித்து தெரிந்து கொள்ள மக்கள் பாவிக்க வேண்டியுள்ள நிலைமையில் இருப்பது "தெரண" தொலைகாட்சி அலைவரிசையையே. காலை 06.30ற்கு ஆரம்பமாகும் "தெரண அருண" நிகழ்ச்சியுடன் நேரடியாக ஒன்லைன் மூலம் தொடர்புகொள்ளும் இராணுவத்தளபதி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சுகாதார அமைச்சர் கடந்த நாட்களில் கொரோனா தொடர்பான அனைத்து தகவல்களையும் குறையில்லாமல் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைய நாட்டில் நடைபெறும்  முக்கிய நெருக்கடியுடன் தொடர்புடைய தகவல்கள் உத்தியோகபூர்வமாக விரைவாக பெற்றுக்கொள்ளக்கூடிய ஒரு மூலமாக தெரண பதிவாகியுள்ளது. அரச அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் காலையிலேயே தமது கருத்துக்களை பதிவது தெரண தொலைக்காட்சியிலேயே. இதை நாட்டின் அதிகாரப்பூர்வ தகவல் அலைவரிசையாக அதாவது "தேசிய தொலைக்காட்சி"யாக தெரண மாற்றப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டலாம்.

இந்த அதிகாரிகள் அமைச்சர்கள் வழங்கிய உத்தியோகபூர்வ தகவல்களுக்கு மேலதிகமாக, அதுதொடர்பாக சதுர அல்விஸ் மற்றும் சங்க மரஜித்தின் இனவெறி மற்றும் மத வெறி குறித்து பார்வையாளர்களுக்கு இலவச விளக்கம் அளிக்கும் அளவுக்கு தெரண அன்பானவர்கள். உண்மையில், இந்த பகுப்பாய்வுகள் அரசின் உத்தியோகபூர்வ பார்வையாகவும்  கருதப்பட வேண்டும். எது உண்மை அல்லது பொய் என்பதைக் கண்டுபிடிக்க யாருக்கும் உரிமை இல்லை.

எனவே, தொடர்ந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி அலைவரிசையாக இருந்து வரும் தெரண தொலைக்காட்சிக்கு நாங்கள் வாழ்த்து தெரிவிக்கிறோம். உண்மையில், தெரணவிற்கு  இந்த இடத்தை கொடுப்பது யாருடையதாயினும் கடமையாகும்.