கொரோனாவிற்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தைப் பற்றி பேச்சுவார்த்தை
Monday, 10 Aug 2020

கொரோனாவிற்கு மத்தியில் தேசிய அரசாங்கத்தைப் பற்றி பேச்சுவார்த்தை

23 March 2020 10:14 am

கொரோனாவின் அபாயநிலை காரணமாக பொது தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போதும் தேர்தல் தொடர்பாக அவதானம் குறையவில்லை என கிடைக்கப்பெறும் செய்திகளில் இருந்து தெரியவருகிறது. 

மே மாதம் மத்தியில் தேர்தல்  நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ஆளும்கட்சி எதிர்க்கட்சி என  அனைவரும் கொரோனாவுக்கு இடையில்  அவர்களின் பிரச்சாரங்களையும் மேற்கொண்டு வருகினறனர்.

இதற்கிடையில், தற்போதைய அரசாங்கம் ஒரு தேசிய அரசாங்கத்தின் மீது கவனம் செலுத்துகிறது என்று எங்களுக்கு அறியக்கிடைத்தது.

இதற்கமைய தற்போதைய அரசாங்கம் மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்க தயாராக இருப்பதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எங்களுக்கு அறியக்கிடைத்த வகையில் பிரதமரின் அறிவிப்பிற்கு அமைய கடந்த ஆட்சி காலத்தில் மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஒருவர் பிரதமரை சந்திக்க சென்றுள்ளதுடன் மேலும் UNP கொழும்பு மாவட்ட பிரமுகர் ஒருவரும் சென்றுள்ளார். 

அரசியல் மோதல்களை தவிர்த்து ஆபத்தான நேரத்தில் இணைந்து நெருக்கடிக்கு முகம்கொடுக்க வேண்டும் என அவர்கள் கலந்துரையாடியுள்ளதுடன் மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து  சீதா அரமேபோலா பதவி விலகியதன் மூலம் உருவாக்கப்பட்ட வெற்றிடத்தை ஏற்குமாறு முன்னாள் ஆளுநரிடம் பிரதமர் கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதில் இப்போது ஒரு சவால் இருப்பதால், ஒரு தேசிய அரசாங்கத்திற்குத் தயாராகுவதன் அவசியம் குறித்தும் அவர்கள் கலந்துரையாடியுள்ளார்.

இதற்கமைய  இருபுறமும் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்காக பாலத்தை கட்டிக்கொண்டிருப்பது கொழும்பு மாவட்ட UNP பிரமுகரே. அதற்கு ஐக்கிய தேசிய கட்சியின் விருப்பம் அல்லது வெறுப்பையோ  இதுவரை வெளிப்படுத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.