பொது தேர்தலுக்கு முரளிதரனா ? பிரபாகரனா?
Monday, 06 Apr 2020

பொது தேர்தலுக்கு முரளிதரனா ? பிரபாகரனா?

17 February 2020 10:42 pm

உலகின் மிக சிறந்த பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் பொது தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்பார்த்துள்ளது. இதற்கு முதல் முரளிதரன் வட மாகாண ஆளுநராக நியமிக்க தயாராக இருந்த நிலையில் அவர் அதற்கு உடன்படவில்லை.

அதன்பின் நுவரெலியா மாவட்டத்தில் பொதுத்தேர்தலில் போட்டியிடுமாறு பொதுஜன பெரமுனவினால்  அவருக்கு முன்மொழியப்பட்ட நிலையில் அதற்காக அவர் தனது இணக்கத்தை தெரிவித்திருந்தார். இதற்கமைய நுவரெலியா மாவட்டத்தில் தனது பிரச்சார நடவடிக்கைகளை முரளி ஆரம்பித்துள்ளார்.

கடந்த தேர்தலில் பொதுஜன பெரமுன வடக்கு கிழக்கை தவிர்த்து கடும் பின்னடைவை அடைந்திருப்பது நுவரெலியா மாவட்டத்தில் என்பதுடன் அந்த மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவுக்கு மக்களை ஈர்க்கக்கூடிய மக்கள் பிரதிநிதிகள் யாரும் இல்லை. அந்த இடைவெளியை நிரப்ப முரளியை அரசியலுக்குள் கொண்டுவருவது மொட்டின் நோக்கமாகும். அவர் ஒரு தமிழர் என்பதால், தோட்டமாக்களின் வாக்குகளை வெல்லவும், உலகத் தரம் வாய்ந்த வீரராக சிங்கள வாக்குகளைப் பெறக்கூடியவதார முரளி இருப்பது பொதுஜன பெரமுனவுக்கு உள்ள சாதகமாகும்.

இதற்கிடையில், சில வலைத்தளங்கள் முரளிதரன் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் அவரது சகோதரர் முத்தையா பிரபாகரன் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாகவும் தெரிவிக்கிறது. இருப்பினும், அது தொடர்பாக அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.

முத்தையா பிரபாகரன் ஒரு பிரபலமான  நபர் அல்ல என்பதுடன் அவர் தேர்தலில் போட்டியிட்டாலும், முத்தையா முரளிதரன் தேர்தலில் தீர்க்கமான சக்தியாக இருப்பார்.