யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு
Monday, 06 Apr 2020

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபர் கடமைகளை பொறுப்பேற்பு

17 February 2020 02:26 pm

யாழ் மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திரு.கணபதிப்பிள்ளை மகேசன் இன்று (17) காலை யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந் நிகழ்வு யாழ்மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றதுடன், திருமதி. வனிதா மகேசனும் கலந்து சிறப்பித்தார்.

மதகுருமார்களின் ஆசிச் செய்திகளுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட புதிய அரசாங்கம் அதிபரின் வரவேற்பு நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் கலந்து கொணண்டனர்.