ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பிணையில் விடுதலை
Monday, 06 Apr 2020

ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பிணையில் விடுதலை

17 February 2020 02:13 pm

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர் ரிப்கான் பதியுதீனை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (17) உத்தரவிட்டுள்ளது.

தலைமன்னார் பகுதியில் உள்ள 24 மில்லியன் பெறுமதியான 40 ஏக்கர் நிலம் ஒன்றிற்கு போலி உறுதிப்பத்திரம் தயாரித்து மோசடி செய்ததாக ரிப்கான் பதியுதீன் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் அது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது ரிப்கான் பதியுதீனுக்கு  25,000 ரூபா ரொக்கப்பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரகசிய பொலிஸார் முன்னிலையில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.