மைத்திரிக்கு வேட்புமனு வழங்கினால் ஈஸ்டர் தாக்குதல் எமது தோலில் - மொட்டில் கடும் எதிர்ப்பு !
Sunday, 29 Mar 2020

மைத்திரிக்கு வேட்புமனு வழங்கினால் ஈஸ்டர் தாக்குதல் எமது தோலில் - மொட்டில் கடும் எதிர்ப்பு !

17 February 2020 12:11 pm

முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு மொட்டு சின்னத்தின் கீழ் எக்காரணம் கொண்டும் வேட்புமனு வழங்கக்கூடாது என கூறி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எம்பிக்கள் சிலர் தமது கட்சி தலைமைக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலுக்கு ஒருவருடம் பூர்த்தியாகும் நேரத்தில் பொது தேர்தல் நடத்தப்படவுள்ளதால் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒரே மேடையில் இணைவது தற்கொலைசெய்வதை போல காரியமாகும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பு கடந்த ஜனாதிபதி தேர்தல் ஐக்கிய  தேசிய கட்சிக்கு எதிராக மக்கள் கருத்தை பெறுவதற்காக பயன்படுத்தியது இந்த பெறுமதியான வெளியிடப்பட்ட தகவலுக்கு அமைய அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தாக்குதலுக்கு முன்னர் அது தொடர்பாக விடுத்த எச்சரிக்கை தொடர்பாக முழுமையாக தெரிந்திருந்த நிலையில் அதை தடுப்பதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர்களினால் கட்சி தலைமைக்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேபோல் தற்போது பிணையில் விடுக்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பிரணாந்து ஆகியோர் ஜனாதிபதி ஆணைக்குழு முன் வழங்கிய சாட்சியத்திற்கு அமைய நிலைமை இதை விட கடும் நெருக்கடியை உருவாக்கும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய ஏப்ரல் 25ம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பொதுத்தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவுடன் ஒன்றாக இணைந்து போட்டியிடுவதையின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து வாய்திறக்க இயலாது என்பதுடன் அதன் பொறுப்பை முழுமையாக எமது தோலில் சுமக்க நேரிடும் என அவர்கள் கடுமையாக சுட்டிக்காட்டியுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் கூட்டணியமைத்துக்கொண்டால் மைத்ரிபால சிறிசேனவுக்கு தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்க இயலாது என முற்கூட்டியே அறிவிக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் குறித்த எம்பிக்கள் சிலர் கட்சி தலைமைத்துவத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.