தேர்தல் சின்னத்தை கூட்டணிக்கு வழங்குவதாயின் கட்சி தனது உரிமைகளை விட்டுவிட வேண்டும்
Sunday, 29 Mar 2020

தேர்தல் சின்னத்தை கூட்டணிக்கு வழங்குவதாயின் கட்சி தனது உரிமைகளை விட்டுவிட வேண்டும்

17 February 2020 10:22 am

ஒரு அரசியல் கட்சியில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சின்னத்தை வேறு ஒரு அரசியல் கட்சி அல்லது கூட்டணியொன்றை பயன்படுத்த அனுமதிப்பதாயின், அந்த கட்சி தனது சின்னத்தின் உரிமையை விட்டுவிட வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார்.

"X எனும் கட்சி இருக்கிறது என நினைப்போம் எதாவது ஒரு சின்னம். X எனும் கட்சி கைவிட்டால் Y எனும் கட்சிக்கு சரி P எனும் கூட்டணிக்கு சரி ஏற்றுக்கொண்ட ஒன்றுக்கு அதை பெற்றுக்கொள்ள முடியும்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது கட்சியின் அனுமதியுடன் செய்யப்படவேண்டியதா என வினவியபோது " இல்லை. அவர்கள் உரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட போது ஒரு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளிக்கும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.