6 இலட்சம் ரூபாய்க்கு நான் கதிரை வாங்கவில்லை - விமல்
Sunday, 29 Mar 2020

6 இலட்சம் ரூபாய்க்கு நான் கதிரை வாங்கவில்லை - விமல்

16 February 2020 10:51 pm

தான் அமைச்சு பதவியில் நியமனம் பெற்ற பின்னர் 6 இலட்சம் ரூபாய் பெறுமதியான கதிரை ஒன்றை வாங்கியுள்ளதாக  ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறிய கருத்து முற்றிலும் தவறானது என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சேறு பூசும் விதமாக ஜேவிபி நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இவ்வாறு உண்மைக்கு புறம்பான செய்தியை பரப்புவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தான்  பதவியேற்றதிலிருந்து புதிய அலுவலக தளபாடங்கள் எதுவும் வாங்கவில்லை என்பதால் இந்த செய்தி தவறானது எனவும் இந்த செய்தியால் தான் மிகுந்த வெறுப்படைந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விமல் 6 இலட்சம் ரூபாய்க்கு கதிரையொன்றை வாங்கியுள்ளார் - ஹந்துன்நெத்தி