மத்திய ஆளுநர் பதவிக்கு போர்!
Saturday, 04 Jul 2020

மத்திய ஆளுநர் பதவிக்கு போர்!

18 November 2019 05:27 pm

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்ததோடு மைத்ரிபால சிறிசேனவின் ஜனாதிபதி பதவி காலம் ரத்து செய்யப்படுவதுடன் அவரினால் நியமிக்கப்பட்ட மத்தியமாகாண ஆளுநர் பதவியும் நாளை முதல் வெற்றிடமாகுவதால் அந்த பதவிக்காக இதுவரை கண்டி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பிரபலங்க நால்வருக்கிடையில் போர் இடம்பெறுள்ளது.

மத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர், டிக்கிரி கொபேகடுவ, வட மத்திய மாகாண முன்னாள் ஆளுநர் சரத் ஏகநாயக்க, மஹிந்த அபேகோன் மற்றும் எஸ்.பி திஸாநாயக்க ஆகியோருக்கிடையில் இந்த போர் ஆரம்பமாகியுள்ளதுடன் தனக்கு இந்த பதவி வழங்கப்பட வேண்டும் என்று கோரி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஏற்கனவே தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாகவும், பிரபலமான தேரர்கள் மற்றும்  சில தரப்புகள் மூலம் மஹிந்த அபேகோன் இந்த கோரிக்கையை ஏற்கனவே கோட்டபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒன்பது மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமிப்பது புதிய ஜனாதிபதியின் முதல் கடமைகளில் ஒன்றாகும்.