இராஜினாமா செயும் அசோக் அபேசிங்க !
Saturday, 12 Jun 2021

இராஜினாமா செயும் அசோக் அபேசிங்க !

18 November 2019 02:29 pm

போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தனது அமைச்சு பதவியை இராஜினாமா செய்ய தீர்மாநிதித்துள்ளார்.

இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது வரை  அரசாங்கத்தின் பல அமைச்சர்கள் இராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதுடன்,மேலும் மக்கள் விருப்புக்கு  மரியாதை செலுத்தும் வகையில் புதிய அரசாங்கம் மற்றும்  அமைச்சரவையையும் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அந்த அமைச்சர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.