அரசில் இருந்து விலகுவதா? பொதுத்தேர்தலுக்கு செல்வதா?- தீர்மானத்திற்கான கூட்டம் இன்று
Saturday, 04 Jul 2020

அரசில் இருந்து விலகுவதா? பொதுத்தேர்தலுக்கு செல்வதா?- தீர்மானத்திற்கான கூட்டம் இன்று

18 November 2019 12:19 pm

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசாங்கமாக எடுக்கப்பட வேண்டிய அடுத்த நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக  அனைத்து அரச கட்சி  உறுப்பினர்களும் இன்று (18) பிற்பகல் ஒன்றுகூடவுள்ளனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்கள் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களை சந்தித்த பின்னர், அனைத்து எம்.பி.க்களையும் இணைத்து  இறுதி முடிவு எடுக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

அதன்படி இன்று பிற்பகல் 02.00 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக  தகவல்  வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதன்போது அரசங்கள் பதவி விலகுவதாக,இல்லையெனில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்துவதற்கு ஆதரவு வழங்குவதா என்பது குறித்து  இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.