கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு இன்று
Saturday, 12 Jun 2021

கோட்டாபய ஜனாதிபதியாக பதவியேற்கும் நிகழ்வு இன்று

18 November 2019 10:19 am

இலங்கையின் ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதியாக கோட்டாபய  ராஜபக்ஷ பதவியேற்பு விழா இன்று (18) காலை அனுராதபுரம்  ருவன்வெலிசாயவில் நடைபெற உள்ளது.

பதவியேற்பதற்கு முன்னர் அவர் ஜயசிறி மஹா போதி மற்றும்  ருவன்வெலிசாயவில் வழிபாடுகளில் ஈடுபட்டு ஆசிர்வாதத்தை பெறவுள்ளதுடன், பதவியேற்ற பிறகு நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.

இந்த நிகழ்வில் மதத் தலைவர்கள், கட்சி எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வெளிநாட்டு இராஜதந்திரிகள் உட்பட பலர் பங்கேற்கவுள்ளனர்.