நான் சஜித் மனைவிக்கு சொன்னேன் சஜித்திற்கு சப்பாத்து வாங்கிக்கொடுக்கும்படி- ஹர்ஷ
Monday, 01 Jun 2020

நான் சஜித் மனைவிக்கு சொன்னேன் சஜித்திற்கு சப்பாத்து வாங்கிக்கொடுக்கும்படி- ஹர்ஷ

13 October 2019 03:29 pm

சஜித் பிரேமதாசவிற்கு இரண்டு சப்பாத்துக்களை வாங்கி கொடுக்க முடியவில்லையா என அவர் மனைவியிடம் தான் கேட்டதாக அமைச்சர் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளார்.

அவர் எந்தநாளும் வெள்ளை காட்சட்டையும், வெள்ளை குறுகிய கை சட்டையும், ஒரு சோடி செருப்புக்களை மட்டும் அணிவதாக கூறிய அமைச்சர், சஜித் பிரேமதாசவிற்கு பொய்யாக மக்களை ஏமாற்ற தேவையில்லை என குறிப்பிட்டுள்ளார். 

நேற்று (12) கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை சிங்கள வாக்குகளால் மட்டுமே வெல்ல முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறினாலும், அதை எந்த காலத்திலும் செய்ய முடியாது என்று ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய தமிழ்,சிங்களம்,முஸ்லிம்,பறங்கியர் என அனைவரும் இலங்கையர்கள் எனவும்,சஜித் பிரேமதாச முன்னிலையாகியிருப்பது இலங்கையர்களுக்காகவும் நாட்டிற்காகவும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.