கோட்டாவின் குடியுரிமை: முழு தீர்ப்பு 11 நாட்களுக்கு பின்பு
Monday, 01 Jun 2020

கோட்டாவின் குடியுரிமை: முழு தீர்ப்பு 11 நாட்களுக்கு பின்பு

13 October 2019 01:45 pm

கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை  எதிர்த்து பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர மற்றும் காமினி வியன்கொட ஆகியோர் தாக்கல் செய்த ரிட் மனுவை நிராகரித்தமை தொடர்பான இறுதி முடிவு அக்டோபர் 15 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

ரிட் மனுவை மூன்று நாட்களுக்கு பரிசீலித்த பின்னர் நிராகரிக்கப்படும் என்று அக்டோபர் 4 ம் திகதி , மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் யசந்த கோதாகொட, தெரிவித்திருந்தார்.

அதன்படி, நீதிபதி குழாமிற்கு  அதன் முழு தீர்ப்பை வழங்க 11 நாட்கள் எடுக்கும் என்பது தெரிகிறது.

மனுவை நிராகரிக்கும் முடிவு 11 நாட்களுக்குப் பிறகு கோரப்படும் என்று பொதுமக்கள் மத்தியில் நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.