தொண்டாவின் ஆதரவு கோட்டாவிற்கு
Friday, 10 Jul 2020

தொண்டாவின் ஆதரவு கோட்டாவிற்கு

13 October 2019 01:09 pm

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ஷவை ஆதரிக்க போவாதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று (13) உத்தியோகபூர்வமாக அறிவித்தது.

கொட்டகலையில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் கூடிய ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட கட்சி பிரதிநிதிகள் இணைந்து கோட்டாவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவை வெற்றிபெற செய்வதற்காக தோட்ட மக்களின் வாக்குகளை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், வெற்றிபெறுவதற்கான பிரச்சார நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அறிவுறுத்தியுள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மாவட்டங்களில் இருந்து இலட்சக்கணக்கான வாக்குகளை கொண்டுள்ளது.