10 ரூபாய் பேனையில் ஜனாதிபதியான மைத்ரி- ஒய்வு பெறும்போது கேட்கும் சொத்து!
Monday, 01 Jun 2020

10 ரூபாய் பேனையில் ஜனாதிபதியான மைத்ரி- ஒய்வு பெறும்போது கேட்கும் சொத்து!

13 October 2019 12:44 pm

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தற்போது அவர் பாவனை செய்யும் பாகெட் வீதி (Paget Road)  உத்தியோகபூர்வ இல்லத்தை தான் ஒய்வு பெற்றதும் பயன்படுத்த அனுமதி பெற அமைச்சரவையில் ஆவணம் சமர்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒய்வு பெற்ற ஜனாதிபதி ஒருவருக்கு குடியிருப்பொன்றை பெற்றுக்கொள்வதற்கான அனுமதி இருப்பதனால்,தான் தற்போது பாவிக்கும் இல்லத்தையே பெற்றுக்கொள்வது ஜனாதிபதியின் நோக்கமாக உள்ளது.

கொழும்பு 07, பாகெட் வீதி (Paget Road) உள்ள உத்தியோகபூர்வ இல்லம்  என்பது ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகமாகும், இது ஜனாதிபதியின் நலனுக்காக கோடிக்கணக்கில்  செலவிடப்பட்டு  கட்டப்பட்டதாகும்.

ஜனாதிபதி பதவி கிடைக்கும் போது  10ரூபாய் காபன் பேனையில் கையொப்பமிட்ட மனிதருக்கும் ஜனாதிபதி பதிவில் இருந்து ஒய்வு பெரும் மனிதருக்கும் இடையில் பெருமளவான வேறுபாடுகளை காணக்கூடியதாக உள்ளது.