ஹிஸ்புல்லாவின் வாக்குகள் கோட்டாவிற்கு செல்லுமா?
Friday, 10 Jul 2020

ஹிஸ்புல்லாவின் வாக்குகள் கோட்டாவிற்கு செல்லுமா?

13 October 2019 11:06 am

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் ஆதரவு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

"டக்ளஸ் தேவானந்தாவின் வாக்குகள், தொண்டமானின் வாக்குகள், அதாவுல்லாவின் வாக்குகள் மற்றும் ஹிஸ்புல்லாவின் வாக்குகள் ... இந்த வாக்குகள் அனைத்தும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வருகின்றன. ஹிஸ்புல்லா தனி வேட்பாளராக போட்டியிடுகிறார். நான் அவருடன் கதைத்து விட்டேன்.

நான் பார்க்கும் விதத்தில் ஹிஸ்புல்லா ரிஷார்ட் பதுர்தீன் போல் பெரிய அளவில் பணமோசடி செய்த ஒரு மனிதர் அல்ல. அவர் வெளிநாட்டிலிருந்து கொஞ்சம் பணம் எடுத்து ஒரு நல்ல பல்கலைக்கழகத்தை கட்டினார், ”என்று எஸ்.பி.குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும்,  மட்டக்களப்பு பல்கலைக்கழகத்திற்கு எதிரான ஊடக பிரச்சாரத்தின் பின்னணியில்  உள்ள அதுரலிய ரத்தன தேரர்  கோட்டாபய  ராஜபக்ஷவுடன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.