எல்பிட்டிய தேர்தல் முடிவிலிருந்து சஜித்தின் தரப்பு கற்றுக்கொள்ள வேண்டும்
Monday, 01 Jun 2020

எல்பிட்டிய தேர்தல் முடிவிலிருந்து சஜித்தின் தரப்பு கற்றுக்கொள்ள வேண்டும்

12 October 2019 05:30 pm

2002ம் ஆண்டு  முதல் எல்பிட்டிய  பிரதேச சபை  தேர்தலின் முடிவுகள் பின்வருமாறு. இதற்கமைய UNP எல்பிட்டியவில் 2002-48%,2006-36%,2011-31% மற்றும் 2019 தேர்தலுக்கான வாக்குகளின் எண்ணிக்கை நேற்று (11) கிட்டத்தட்ட 25% ஆகும்.

இதற்க்கமைய 2011ம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி கடினமான நிலையில் இருந்தபோது, பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரங்களால்  ராஜபக்ஷர்கள் உதவியற்றவர்களாக இருந்தபோது, ராஜபக்ஷர்கள் யுத்த களிப்பை கொண்டாடும்போது கூட 31% வாக்குகளை பெற்ற UNP தனக்கென ஒரு அரசாங்கத்தை உருவாக்கியும் 25% வாக்குளை மட்டுமே பெற்று பின்னடைவை சந்தித்துள்ளமை தெளிவாகிறது.

சஜித் பிரேமதாச ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் UNPயில்  பாரிய விழிப்புணர்வு இருக்கும் என்று கருதப்பட்டாலும், கட்சியை விட்டு வெளியேறிய பிரபல நபர்கள்  மீண்டும் கட்சியில் இணைவது ஊடகங்களால் பகிரப்பட்டபோதிலும், கிராம மட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படவில்லையா என்பது கேள்வியாக உள்ளது.

ஒரு உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் ஜனாதிபதித் தேர்தலைக் கணிக்க முயற்சிப்பது அரசியல் ரீதியாக தவறானது. நேற்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவும் இதனை தெரிவித்திருந்தார். இருப்பினும் அதே மஹிந்த எல்பிட்டிய பெறுபேறுகள் தான் ஜனாதிபதி தேர்தல் முடிவு என தற்போது கூறுவதுடன், UNP தேர்தல் முடிவுகளுக்கு முன் மஹிந்த கூறிய கருத்தை தூக்கிப்பிடித்துக்கொண்டு செல்கின்றது.

இந்த ஒற்றைப் பிரிவில் ஜனாதிபதித் தேர்தல் குறித்து அனுமானங்களைச் செய்வது தவறு என்றாலும், என்ன நடந்தது என்பதன் தாக்கங்களை ஆய்வு செய்வது யு.என்.பி.க்கு லாபகரமாக இருக்கும்.