ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் -கரு
Saturday, 06 Jun 2020

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் -கரு

17 September 2019 03:11 pm

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயாராக உள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக அறிக்கையில், 

கடந்த சில வாரங்களில் மதத்தலைவர்கள், பல்வேறு சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நிபுணர்கள், தொழில்முனைவோர், இளைஞர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் தன்னை தொடர்பு கொண்டதாகவும், சில முக்கிய விடயங்களுக்காக ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குமாறு என்னை தொடர்பு கொண்டவர்கள் கோரியுள்ளனர்.

நாட்டினுள் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கும், நிலவும் அரசியல் குழப்பத்தை போக்கி கண்ணியமான ஆட்சியை ஏற்படுத்துவதற்காக நம்பிக்கைமிக்க தலைவர் ஒருவர் நாட்டிற்கு தேவை என்பதால், குறித்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பினரும் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நன்றி. எவ்வாறாயினும், தான் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கினால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதே எனது  பிரதான கடமையாகும்.

1995 ஆம் ஆண்டு முதல் நாம் தொடர்ச்சியாக முகங்கொடுக்கும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்காக ஒன்றிணையும் அரசியல் அணிகளுடன் மாத்திரமே தான் இணைந்து செயற்படவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய குறித்த ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.