சஜித்தை ஆதரிக்க முடியும்-ஹகீம்

சஜித்தை ஆதரிக்க முடியும்-ஹகீம்

17 September 2019 02:31 pm

ஐக்கிய தேசிய கட்சியின் பிரபலமான நபரொருவர் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.

குருணாகலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் வேட்பாளரை பெயரிடாததால் அடுத்த வாரத்திற்குள் இது தொடர்பாக முடிவெடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

UNPயின் வேட்பாளர் பெயரிட்ட பிறகு பிற கட்சிகளுடன் இணைந்து இறுதி தீர்மானத்திற்கு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற கட்சிகளின் ஆதரவைப் பெறுமாறு பிரதமர் சஜித் பிரேமதாசவுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அவர் தனது குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க ஆர்வமாக உள்ளதாக அமைச்சர் ரவுப் ஹகீம் தெரிவித்துள்ளார்.