இன்னும் என்ன சொல்வார்களோ தெரியவில்லை-மைத்திரியை நாடுமாறு மஹிந்த உத்தரவு
Saturday, 06 Jun 2020

இன்னும் என்ன சொல்வார்களோ தெரியவில்லை-மைத்திரியை நாடுமாறு மஹிந்த உத்தரவு

17 September 2019 12:29 pm

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மூலம் தாமரை கோபுர திட்டம் குறித்து தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுடன் தேவையற்ற முறையில் குழப்பமான மோதலை உருவாக்கக்கூடாது எனவும், உடனடியாக ஜனாதிபதியுடன் கூட்டணியை உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மஹிந்த ராஜபக்ஷவினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு  அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (16) தாமரை கோபுர திறப்பு விழாவில் 200 கோடி ரூபா மோசடி தொடர்பாக ஜனாதிபதி அறிவித்த பிறகு நிலைமையை சமநிலை செய்ய கோட்டாபய ராஜபக்ஷ, பெசில் ராஜபக்ஷ  கட்சியின் மேல்மட்ட அதிகாரிகளுடன் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியுடன் மோதல்களை உருவாக்கிக்கொண்டால் மேலும் பல விடயங்கள் வெளிவர வாய்ப்பு இருப்பதால் தமது கட்சியின் ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்திற்கு மோசமான பாதிப்பு ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
எனவே உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல் புத்திசாலித்தனமாக இருப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக மஹிந்த இதன் போது வலியுறுத்தியுள்ளார்.

உடம்பால் அல்ல மூளையால் வேலை செய்யுங்கள் !

இதற்கமைய ஜனாதிபதியுடன் கூடிய விரைவில் ஒரு கூட்டணியை உருவாக்குவதே இந்த நேரத்தில் மிகச் சிறந்த நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக ஜனாதிபதியின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் நியமிக்க மாட்டேன் என்று சபதம் செய்த ஜனாதிபதி மீண்டும் அவரை நியமித்தது தொடர்பாக மஹிந்த இதன்போது நினைவுகூர்ந்துள்ளார்.

அதனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இரண்டில் ஒன்று பார்த்துக்கொள்ளலாம் தற்போது ஜனாதிபதியின் உதவியை நாடி தேர்தலில் வெற்றிப்பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

வியூகத்துடன் செயற்பட வேண்டிய நேரத்தில் தனிப்பட்ட பெருமைகளை முன்வைப்பது முட்டாள்தனம் என்று அவர் கூறியுள்ள அவர், ராஜபக்ஷ குடும்பத்தில் அனைவருக்கும் நல்ல அரசியல் அனுபவம் உள்ளத்துடன், தனக்கு அதிக அரசியல் அனுபவம் உள்ளதால் தான் கூறும்படி அனைவரும் செயற்படவேண்டும் என அவர் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.