தாமரை கோபுர மோசடி கதை- ஜனாதிபதியால் மொட்டிற்கு கொடுத்த ரிட்டன்
Saturday, 06 Jun 2020

தாமரை கோபுர மோசடி கதை- ஜனாதிபதியால் மொட்டிற்கு கொடுத்த ரிட்டன்

17 September 2019 10:28 am

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கோபமாக நபரொருவருக்கு கெட்டவார்த்தைகளால் திட்டும் வண்ணமான ஒலிப்பதிவை சமூகவலைத்தளங்களில் ஊடுருவ செய்தது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்புடையவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

நேற்று முன்தினம் (15) இந்த ஒலிப்பதிவு முகப்புத்தகம் மற்றும் வாட்சப் சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியதுடன், அது UNPயின் சஜித் தரப்பினரின் முகப்புத்தக பக்கம் போன்று வடிவமைக்கப்பட்ட போலி கணக்கொன்றின் மூலம் பதிவிடப்பட்டிருந்தது.

குறித்த ஒலிப்பதிவின் உள்ளடக்கங்கள் அவரது உருவத்திற்கு சேதம் விளைவிப்பதாகவும், இதில் தெளிவான  ஒரு சதித்திட்டம் இருப்பதால், இணையத்துடன் யார் அதை இணைக்கிறார்கள் என்று விசாரிக்க ஒரே நாளில் சமூக ஊடகங்கள் மற்றும் இணைய பாதுகாப்பு நிபுணர்கள் குழுவுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்த ஒரு தரப்பினரால் இந்த ஒலிப்பதிவு  சமூக ஊடக வலையமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், வாட்சப் மூலம் இதை பரவ செய்தது கோட்டாபய ராஜபக்ஷவின் ஜனாதிபதி தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் ஏராளமானோர் இதற்கு பங்களிப்பு வழங்கியுள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தனக்கு எதிராக மொட்டினால்  மேற்கொள்ளப்பட்ட சதித்திட்டம் தொடர்பாக அறிந்து கோபமைடைந்த ஜனாதிபதி நேற்று (16) தாமரை கோபுர விழாவில் ராஜபக்ஷ ஆட்சியின் குறித்த  திட்டத்தின் தொடக்கத்தில் ராஜபக்ஷ நிர்வாகம் ரூ .200 மில்லியனை மோசடி செய்துள்ளதாகவும், இந்த திட்டத்திற்கு கடன் வாங்கப்பட்ட விதத்தினால் வருடாந்தம் 240 கோடி ரூபாய் சீனாவுக்கு வழங்கவேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியது பெரமுனவை பழிவாங்கும் நோக்கில் என தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

UNPயை கெட்டவார்த்தைகளால் திட்டிய மைத்ரி- வெளியான ஒலிப்பதிவு

தாமரை கோபுர நிர்மாணத்தில் கொள்ளையடித்த மஹிந்த - போட்டுடைத்த ஜனாதிபதி