தாமரை கோபுர நிர்மாணத்தில் கொள்ளையடித்த மஹிந்த - போட்டுடைத்த ஜனாதிபதி
Saturday, 30 May 2020

தாமரை கோபுர நிர்மாணத்தில் கொள்ளையடித்த மஹிந்த - போட்டுடைத்த ஜனாதிபதி

16 September 2019 10:04 pm

தாமரை கோபுரம் திட்டத்தின் தொடக்கத்தில் 2012ஆம் ஆண்டு 200 கோடி ரூபா தொகை மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

2012ம் ஆண்டு சீன நிறுவனத்திற்கு வழங்கிய 200 கோடி ரூபாய் முற்பணம் தொடர்பாக சிக்கல் ஏற்பட்ட போது அது தொடர்பாக விசாரணை செய்யும் போது சீனாவில் அத்தகைய நிறுவனம் இல்லை என்பது தெரியவந்துள்ளது என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இன்று (16) மாலை தாமரை கோபுர திறப்பு விழாவில் ஜனாதிபதி இது தொடர்பாக தெரிவித்துள்ளார்.