ஒலிப்பதிவுக்குப் பிறகு மொட்டில் மைத்ரியின் புகழ்!
Saturday, 06 Jun 2020

ஒலிப்பதிவுக்குப் பிறகு மொட்டில் மைத்ரியின் புகழ்!

16 September 2019 03:54 pm

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக கோபமாக கெட்டவார்த்தைகளால் திட்டிதீர்க்கும் ஒலிப்பதிவு ஒன்று நேற்று (15) சமூக ஊடகத்தில் வேகமாக பரவியதை தொடர்ந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்குள் ஜனாதிபதியின் புகழ் வேகமாக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொட்டின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஜனாதிபதி UNP யை சரியான முறையில் திட்டியுள்ளதாக கருதுகின்றனர்.

கடந்த நான்கரை ஆண்டுகளில் ஜனாதிபதி ஆற்றிய மிகச் சிறந்த உரைகளில் ஒன்றாக இது காணப்படுவதாக சில மொட்டின் உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டபோதிலும், கடந்த நான்கரை ஆண்டுகளில் UNP , ஆட்சியில்  ஜனாதிபதிக்கு தொந்தரவு செய்ததற்காக மொட்டு  உறுப்பினர்களிடமிருந்தும் ஜனாதிபதி  அனுதாபத்தைப் பெற்றுள்ளார்.

இதற்கமைய மொட்டின்  இதயங்களை ஜனாதிபதி கவர்ந்துள்ள நிலையில், மொட்டுடன் உரையாற்ற  மிகச் சிறந்த நேரம் இது என்று கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவிற்கு இடையில்  கூட்டணி உருவாவதற்கு ஒரு முக்கிய தடையாக இருந்தது மொட்டின் அடிமட்ட அளவிலான உறுப்பினர்கள்  ஜனாதிபதியின் மீது கொண்டிருந்த அதிருப்தியாகும்.

2015ம் ஆண்டு வெற்றியை தம்மிடம் இருந்து பறித்த நபராக அவர் மீது வைராக்கியம் ஒன்று மொட்டின் உறுப்பினர்களுக்கு காணப்பட்டது.

நேற்று வெளியிடப்பட்ட குறித்த ஒளிப்பதிவினால் அந்த தடை தற்போது முற்றலும் நீக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி மொட்டினுள்  மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவராக மாறிவிட்டார் என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

UNPயை கெட்டவார்த்தைகளால் திட்டிய மைத்ரி- வெளியான ஒலிப்பதிவு