தேசிய பிரச்சினை பற்றி தெரியாத சஜித்துடன் எங்களுக்கு என்ன அரசு ?-TNA

தேசிய பிரச்சினை பற்றி தெரியாத சஜித்துடன் எங்களுக்கு என்ன அரசு ?-TNA

16 September 2019 12:19 pm

தேசிய பிரச்சினையில் புரிந்துணர்வு, செயல்பாடு, உணர்திறன் அல்லது ஆர்வம் இல்லாத சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடியாது என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு  (டி.என்.ஏ) நேரடியாகக் கூறியுள்ளது.

நேற்று (15) காலை 11.00 மணிக்கு சஜித் ஆதரவு கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை ஆர்.சம்பந்தனின் வீட்டில் தொடங்கியது.

சஜித்தின் குழு சார்பில் கிளர்ச்சித் தலைவர் மலிக் சமரவிக்ரமா, மங்கள சமரவீர ஆகியோர் கலந்து கொண்டதுடன்,பேச்சுவார்த்தைகளின் ஒருங்கிணைப்புக்காக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் கலந்துகொண்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தையின் ஆரம்பத்தில் சஜித்தின் குழுவிடம் இலங்கையை அபிவிருத்தி செய்ய அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்ன திட்டமிட்டுள்ளீர்கள்  என்று கேட்டிருந்தனர். 

மேலும், தனிநபர் வருமானம், டொலர் 4,000 மாக  எட்டும்போது இலங்கை பெறும் 'நடுத்தர வருமான பொறிக்கு" சஜித்தின் தீர்வு என்ன என்பதையும் மேலும் 30 அமைச்சகங்களுக்கு தனித்தனி செயல் திட்டங்கள் உள்ளதா என்பதையும் TNA விசாரித்துள்ளது.

இதற்கு பதிலளித்த  மங்கள சமரவீர, எதிர்காலத்தில் எல்லாவற்றையும் செயல்படுத்த முடியும் என்று கூறியுள்ளார்.

தேசிய பிரச்சினை பற்றி எதுவும் தெரியாத ஒரு அரசியல் குழந்தை

பின்னர் சம்பந்தன் இனப்பிரச்சினை வரலாற்றைக் கொண்ட, அறிவு, புரிதல், உணர்வுத்திறன்  அல்லது அதில் குறைந்தபட்ச  அக்கறை இல்லாத அரசியல் குழந்தை சஜித் பிரேமதாசவை அவர் எவ்வாறு ஆதரிப்பது என கேட்டுள்ளார்.

தனது மக்களை என்றென்றும் ஏமாற்ற அனுமதிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.

இந்த எல்லாவற்றையும் தன்னால் சரிசெய்ய முடியும் என்றும், அவற்றை சரிசெய்யக்கூடிய நபர் சஜித் பிரேமதாச என்றும் மங்கள சமரவீர இதன்போது  கூறியுள்ளார்.

வரலாற்றில் ஒருபோதும் இது தொடர்பாக ஒரு வார்த்தை கூட பேசாத சஜித் பிரேமதாசவை எவ்வாறு நம்புவது என்று சம்பந்தன் தொடர்ந்து கேட்டுள்ளார்.

வரலாறு முழுவதும் தேர்தல் நேரத்தில் இதுபோன்ற வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மங்களா, ராஜிதா மற்றும் பலர் தேசிய பிரச்சினைக்கு தொடர்ந்து தீர்வு காண முன்வந்துள்ளதுடன், சஜித் பிரேமதாச என்பவர்  சொற்களின் அர்த்தத்தையும் அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் கருத்தையும் அறியாத ஒரு நபர் என்று சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மங்கள சமரவீர, "இல்லை, அது இல்லை. நாங்கள் சஜித்தை உருவாக்க முடியும். நாங்கள் அவரைப் செய்துஎடுக்கிறோம் . எங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை மட்டும் கொடுங்கள். 

உங்கள் அனைத்து எம்.பி.க்களும் இதற்கு விருப்பம் அளித்துள்ளனர், சுமந்திரன்  மட்டுமே இதை விரும்பவில்லை. சுமந்திரனுக்கு மட்டுமே இது பிடிக்கவில்லை.என கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைக்கு இடையில் சுமந்திரன் தொடர்பாக பேசியதால் சம்பந்தன் கோபமடைந்துள்ளார்.