நாடு முழுவதும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள்- CIDயில் சிக்கிய ஹிஸ்புல்லா!
Saturday, 30 May 2020

நாடு முழுவதும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள்- CIDயில் சிக்கிய ஹிஸ்புல்லா!

15 September 2019 04:41 pm

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லா சவூதி அரேபிய நிறுவனத்தின் நிதி உதவியுடன் நாடு முழுவதும் 3,000 ஏக்கருக்கும் அதிகமான நிலங்களை வாங்கியதாக குற்றவியல் புலனாய்வுத் துறை மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஹிஸ்புல்லா நிலத்தை வாங்குவதற்கு நிதியளித்த நிறுவனம் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளை ஆதரிக்கும் ஒரு சவுதி அரேபிய அமைப்பாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இதற்கமைய ஹிஸ்புல்லா மூலோபாய திட்டத்தின் படி செயல்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சவூதி அரேபியாவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு பணத்தை செலுத்தும் பல நிறுவனங்கள் உள்ளன, மேலும் ஹிஸ்புல்லா போன்றவர்கள் அவர்கள் மூலம் கோடீஸ்வரர்களாக மாறுகிறார்கள்.

ஆனால் இறுதியில் சிக்கலில் மாட்டுவது சாதாரண முஸ்லிம்களே. ஒருபுறம் பண அதிகாரமும், மறுபுறம் அரசியல் அதிகாரமும் கொண்ட ஹிஸ்புல்லா போன்றோர் எப்போதும் சட்டத்தின் ஓட்டைக்குள் தப்பி செல்கின்றனர்.