மாத்தறை-ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் கபீரின் பலி பூஜை
Saturday, 06 Jun 2020

மாத்தறை-ஹம்பாந்தோட்டை நெடுஞ்சாலையில் கபீரின் பலி பூஜை

15 September 2019 03:18 pm

நாமல் ராஜபக்ஷ திருமணத்திற்காக விடுத்த வேண்டுகோளுக்கு அமைய , மாத்தறை-ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலையை  அமைச்சர் கபீர் ஹஷிம் கடந்த 12 ஆம் திகதி திறந்து வைத்துள்ளதாக  நாங்கள் தெரிவித்தோம்.

இதற்கிடையில், நெடுஞ்சாலையின் நுழைவாயில் திறந்திருப்பதனால் கடந்த 13 ஆம் திகதி இரவு நெடுஞ்சாலையில் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில்  ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றும் இருவர் பலத்த காயமடைந்தனர்.

சாலையை மறைத்து  குறுக்கே வைக்கப்பட்டிருந்த  கான்கிரீட் தொகுதியில் இந்த கார் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் கார் முற்றுமுழுதாக சேதப்பட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது.

பொதுவாக, நிறைவடையாத நிலையில் உள்ள நெடுஞ்சாலை நுழைவாயிலை  திறக்க கூடாது. குறிப்பாக கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அந்த பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க தவறியதற்கு பொறுப்பானவர்கள் மீது  சட்ட நடவடிக்கை எடுக்கலாம்.

இருப்பினும், நாமலின்  திருமணம் முடிந்ததும், அதிவேக நெடுஞ்சாலையின் மாத்தறை -ஹம்பாந்தோட்டை  பகுதிக்கான அனைத்து நுழைவாயில்களும்  மீண்டும் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

க.கி 

சஜித்துக்கு தெரியாமல் நாமலுக்கு உதவிய கபீர்