சஜித் தரப்பு -TNA சந்திப்பு இன்று

சஜித் தரப்பு -TNA சந்திப்பு இன்று

15 September 2019 12:35 pm

ஐக்கிய தேசிய கட்சியின் சஜித் தரப்பு இன்று (15) தமிழ் தேசிய கூட்டமைபின் பிரமுகர்களை சந்தித்து அவர்களின் ஆதரவை கோரவுள்ளது.

சஜித் தரப்பின் கிளர்ச்சி தலைவர் மலிக் சமரவிக்ரம,கபீர் ஹசிம் மற்றும் மங்கள சமரவீர ஆகியவர்கள் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக  தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 10ம் திகதி நடைபெற்ற ரணில்-சஜித் சந்திப்பின் போது ரணில் விக்ரமசிங்க சஜித் பிரேமதாசாவிற்கு உடனடியாக தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து முதலில் அவர்களின் ஆதரவை பெறுமாறு தெரிவித்திருந்தார்.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை பெயரிட்ட பின்னர் அவருக்கு ஆதரவு வழங்குவதா இல்லையா என முடிவெடுப்பதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது நிலைப்பாட்டை இதுவரை மாற்றவில்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த வார இறுதியில் யு.என்.பி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிக்க நான்கு பக்கமும் உறுதியளித்த சஜித் தரப்புக்கு  இந்த நாள் மிகவும் முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

க.கி