கபீர் நீக்கம்! லக்ஷ்மனுக்கு கிடைக்கும் பதவி!
Saturday, 06 Jun 2020

கபீர் நீக்கம்! லக்ஷ்மனுக்கு கிடைக்கும் பதவி!

14 September 2019 08:43 pm

அமைச்சர் கபீர் ஹசிமை ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக கட்சியின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்கள் தொடர்ச்சியாக  பலமுறை விடுத்த கோரிக்கைகளைத் தொடர்ந்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்ததாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கபீர் ஹஷிம் கட்சி பொறுப்புகளை புறக்கணித்து வருவதாக கட்சி எம்.பி.க்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கட்சிக்குள் கருத்து தெரிவிக்க கபீர் ஹஷிமுக்கு உரிமை இருந்தாலும், அவர் கட்சியின் தவிசாளராக சுதந்திரமாகவும் மிதமாகவும் செயல்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி அரசியல் குழுக்களுடன் இரகசிய கலந்துரையாடல்களை நடத்தி கட்சிக்கு எதிராக சதி செய்ததாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கட்சி தவிசாளர் பதவியில் இருந்து அவரை நீக்க வேண்டும் என கட்சியின் எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அதன்படி, பெரும்பான்மை எம்.பி.க்களின் வேண்டுகோளின் பேரில் கபீர் ஹஷிமை UNP தவிசாளர்  பதவியில் இருந்து நீக்க கட்சி முடிவு செய்துள்ளது.

இதற்கமைய கட்சியின் தவிசாளர்  பதவிக்கு சபைத் தலைவர் லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்  வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.