மொட்டின் பிராத்தனை சஜித் -மஹிந்த
Thursday, 20 Feb 2020

மொட்டின் பிராத்தனை சஜித் -மஹிந்த

25 August 2019 11:17 pm

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச போட்டியிடுவதை தான் விரும்புவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இருப்பினும் தற்போது செல்லும் நிலையில் UNPக்கு எதிர்காலம் ஒன்று இல்லை எனவும், அனைவரும் சண்டைபிடித்துக்கொள்வதுடன் தலைமைத்துவத்துக்கு அடிபட்டுக்கொள்கிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பண்டாரநாயக்கசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (25) நடைபெற்ற விழாவில்  கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு பதிலளிக்கும் போதே மஹிந்த ராஜபக்ஷ இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் முதல் தேர்தல் பிரச்சாரத்திற்காக கிராமத்திற்கு கிராமம் செல்ல தயாராக இருப்பதாகவும், மேலும் கோதபய ராஜபக்ஷ தேர்தலுக்கு நன்கு தயாராக உள்ளார் என்றும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

இதேவேளை சிறுபான்மையின் ஆதரவும் இம்முறை தமக்கும் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மையினர் இந்த முறை எங்களுக்கு  முழு ஆதரவைப் தருகிறார்கள். ஏனென்றால் மக்கள் ஒவ்வொரு நாளும் ஏமாற்றுவதில்லை. தலைவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள். ஆனால் அத்தகைய வேலை இனி  இல்லை. யார் வேலை செய்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும். வடக்கு மற்றும் கிழக்கு நோக்கி ஒரு பாலம் கூட அரசாங்கம் திறக்கவில்லை. வடக்கில் வேலை செய்திருந்தால் அதை , நாங்களே செய்துள்ளோம். "

கோதபய ராஜபக்ஷவின் குடியுரிமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மஹிந்த ராஜபக்ஷ சரியான பதில் எதுவும் அளிக்கவில்லை.

KK