அனாதையான கோட்டாவின் பிரசாரம்
Wednesday, 26 Feb 2020

அனாதையான கோட்டாவின் பிரசாரம்

25 August 2019 09:42 pm

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் பிரச்சாரம் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்காததில் கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது என்பதை நாங்கள் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளோம்.

தோல்வியின் ஒரு  படியாக இனவெறியை மீண்டும் தூண்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளதையும் நாங்கள் வெளிப்படுத்தினோம்.

கோட்டபயாவின் நெருங்கிய நண்பரும் பிரசாரத் திட்டத்தின் தலைவருமான திலித் ஜெயவீரவின் தெரண மீடியா நெட்வொர்க்கின் 'சதி அக அருண' செய்தித்தாளில் அவசரகால  சட்டம்  ரத்து செய்ததன் காரணமாக தவ்ஹீத் ஜமாத்தின் மீதான தடை நீக்கப்படும் என்றும் ஈஸ்டர் குண்டுவெடிப்பு தொடர்பான 200 சந்தேக நபர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் அப்பட்டமான தவறான அறிக்கையை குறித்த  செய்தித்தாள் வெளியிட்டது.

இதேவேளை குறித்த செய்தியை தெரண தொலைக்காட்சியில் பத்திரிகை நிகழ்ச்சியான "தெரண அருண" நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது.

கோதபய ராஜபக்ஷவின் சமூக ஊடக பிரச்சாரம் அவரது பேஸ்புக் கணக்குகள் மற்றும் பேஸ்புக் பக்கங்கள் மூலம் இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஜமாத் மில்லெட் இப்ராஹிம் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு வர்த்தமானி அறிவிப்பு மூலம் தடை செய்யப்பட்டுள்ளதால், நாட்டிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என  பொலிஸ் ஊடக பேச்சாளர் அறிவித்த போதிலும், தெரண மீடியா நெட்வர்க்கின் பேஸ்புக் பக்கங்கள் மற்றும் யூடியூப் சேனல்களில் தவறான செய்திகள் இன்னும் ஒளிபரப்பப்படுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்கள் உள்ள நிலையில், எதிர்வரும் காலகட்டத்தில் கோதாவின் நண்பர்கள் என்ன என்ன செய்திகளை தயாரிப்பார்கள் என்று ஆச்சரியப்பட தேவையில்லை.

க.கி