மத்திய கலாச்சார நிதியம் சஜித்துக்கு மற்றொரு புதையலா?

மத்திய கலாச்சார நிதியம் சஜித்துக்கு மற்றொரு புதையலா?

25 August 2019 08:11 pm

வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச கடந்த காலங்களில் மத்திய கலாசார நிதியத்திற்கு சொந்தமான 1,500 மில்லியன் ரூபாவை தனிப்பட்ட அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டுகிறது.

சஜித் பிரேமதாச தனது தனிப்பட்ட படத்தை விளம்பரப்படுத்த இவ்வளவு பெரிய தொகை மத்திய கலாச்சார நிதியிலிருந்து பெற்றுள்ளதாக கடந்த வாரம் நடைபெற்ற இரண்டு ஊடக மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்கள் டலஸ் அலகபெரும மற்றும் காஞ்சன விஜசேகர ஆகியோர் சுட்டிக்காட்டினார்.

மேலும் கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி 300 மில்லியன் ரூபா தொகையை பெறுவதற்கு முயற்சித்ததாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த மோசடி மத்திய வங்கி  மோசடிக்கு அடுத்தபடியாக இந்த நிதி மோசடி இருப்பதாக அவர்கள் கூறினர். அதன்படி சஜித் பிரேமதாச மத்திய கலாச்சார நிதியத்தில் 1500 மில்லியன் ரூபாவை பெற்றிருந்தால் அது கடந்த நான்கரை ஆண்டுகளில் மிகப்பெரிய நிதி மோசடியாக இருக்கும்.

KK