குழப்பமடைய ஒன்றுமில்லை- நேரமுள்ளது (VIDEO)
Wednesday, 26 Feb 2020

குழப்பமடைய ஒன்றுமில்லை- நேரமுள்ளது (VIDEO)

25 August 2019 04:20 pm

"ஜனாதிபதித் தேர்தல் என்பது ஒருவர் அல்லது இரண்டு நபர்களைப் பற்றியது அல்ல. மேலும் என்னவென்றால், ஜனாதிபதித் தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பின் எதற்கு இந்த கொந்தளிப்பு. முதிர்ச்சி, வேலை செய்யும் திறன் மற்றும் சர்வதேசத்துடனான உறவு ஆகியவற்றை கருத்தில் கொண்டுதான் வேட்பாளர் குறித்து எங்கள் கட்சி ஒரு முடிவை எடுக்கும். ” என மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று (24) ராகம தேவாலயத்தின் வருடாந்திர உற்சவத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுடன் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின்  பாரம்பரியம் தெரியாத நபர்கள்  ஜனாதிபதி வேட்பாளரை உயர்த்துவதன் மூலம் கட்சியில் பிரச்சினைகளை உருவாக்க முயற்சிக்கின்றனர் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் குறித்து இதுவரை அறிவிக்கப்படாத நிலையில் குழப்பமடையாமல் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க உழைப்பது முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளார்.

KK