எனக்கும் கோதபயாவுக்கும் இடையிலான தொடர்பை உடைக்க முயற்சிக்கிறீர்களா? - சட்டமா அதிபர்
Wednesday, 26 Feb 2020

எனக்கும் கோதபயாவுக்கும் இடையிலான தொடர்பை உடைக்க முயற்சிக்கிறீர்களா? - சட்டமா அதிபர்

23 August 2019 08:52 pm

கடந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் " த நேசன்" பத்திரிகையின் செய்தித்தாளின் ஆசிரியர் கீத் நோயாரை கடத்தி கொடூரமான முறையில் தாக்கியாமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இந்த குற்றங்கள் சம்பந்தமாக சுமித் எனும் இராணுவ சிற்பாய் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் தகவல்கள் வெளிப்படுத்தியது.

இந்த குற்றத்தில் சிப்பாய் சம்பந்தப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததால் அவர்கள் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு தகவல் கொடுத்தனர்.

கீத் நோயர் தாக்குதல் தொடர்பான வழக்கில் பொறுப்பாக இருப்பது சட்டமா அதிபர் திணைக்களத்தின் அரச முதுநிலை வழக்கறிஞர் லக்மினி கிரிஹாகம. இதற்கமைய முறையான நடைமுறைக்கு ஏற்ப சந்தேக நபரை கைது செய்யுமாறு சிஐடியிடம் அவர் அறிவுறுத்தியிருந்தார்.


"எனக்கும் கோதபயாவுக்கும் இடையிலான தொடர்பை உடைக்க முயற்சிக்கிறீர்களா?"

இதற்கிடையில், சட்டமா அதிபர்  டப்புல த  லிவேரா இது குறித்து கேள்விப்பட்டதுடன், நீண்டகாலமாக ஆத்திரத்துடன் அவரை கண்டித்த சட்டமா அதிபர் லக்மினியிடம்  "நீங்கள் என்னையும் கோதபயாவையும் அழிக்க முயற்சிக்கிறீர்களா?" என கேட்டுள்ளார். 

இந்த பிரச்சினையால் லக்மிணி அதிர்ச்சியடைந்துள்ளதுடன், சிறிது நேரத்திற்கு பிறகு தான் சட்டமா அதிபருக்கு விளங்கியுள்ளது வார்த்தையை தவறவிட்டு விட்டோம் என்று.

"செய்யும் வேலைகள் அனைத்தையும் எனக்கு சொல்லிவிட்டு என் அனுமதியை பெற்று செய்யுங்கள்" என மீண்டும் வலியுறுத்தியுள்ள சட்டமா அதிபர் அவரை அனுப்பி வைத்துள்ளார்.