இது மற்றொரு வெள்ளிக்கிழமையா?

இது மற்றொரு வெள்ளிக்கிழமையா?

23 August 2019 11:41 am

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவின் சமீபத்திய சர்ச்சைக்குரிய அரசியல் முடிவுகள் எடுக்க உள்ளத்துடன், இன்று (23) வெள்ளிக்கிழமை சில சம்பவங்கள் நிகழும் என அரசியல் அரங்கில் வதந்திகள் பரவி வருகின்றன.

ஆகஸ்ட் 22 ஆம் திகதிக்கு  முன்னர் சஜித் பிரேமதாச UNPயின்  ஜனாதிபதி வேட்பாளராக பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி சஜித்தின் கிளர்ச்சித் தலைவர் மலிக் சமரவிக்ரமவிடம் தெரிவித்திருந்ததுடன், அந்த காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.

இதற்கு பதிலளிக்கும் வகையில்  சஜித் ஆதரவாளர்கள்  செய்தியாளர் கூட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்குவது மற்றும் வேட்பாளரை நியமனம் செய்வது இரண்டுமே ஆகஸ்ட் 23ம் திகதி  அன்று ஒரே நேரத்தில் நடைபெறும் என்று கூறினார்கள். இருப்பினும் அது தற்போதே நடைபெறும் என எதிர்ப்பார்க்க முடியாதுள்ளதுடன், சஜித் ஆதரவாளர்கள் ஒரு வாரத்திற்குள் சஜித்தை வேட்பாளராக நியமிக்கவில்லை என்றால் மாற்று நடவடிக்கை எடுப்போம் என்று UNP  தலைமைக்கு அச்சுறுத்தியுள்ளது.

மாற்று விருப்பம் என்னவென்றால், ஜனாதிபதியின் உதவியுடன் ரணில்  விக்கிரமசிங்கவை நீக்கி, சஜித் பிரேமதாசவை அந்த பதவிக்கு நியமிப்பது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியோ இந்த முயற்சி குறித்து  மறுப்பு தெரிவிக்கவில்லை. 

ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கி 52 நாள் அரசை நியமித்தது 2018ம் ஆண்டு அக்டோபர் 26ம் திகதி, நவம்பர் 11, 2018 வெள்ளிக்கிழமை, பாராளுமன்றம் கலைப்பு வர்த்தமானியை வெளியிட்ட நாள். மைத்ரிபால சிறிசேன ஜனவரி 9, 2015 அன்று ஜனாதிபதியாக பதவியேற்றார்.

இன்று ஒரு வெள்ளிக்கிழமை என்றும், நிலவும் அரசியல் நிலைமைப்படி இன்று இரவு 10 மணி வரை முக்கியமானது என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

KK