நான் ஜனாதிபதி ஆகுவதை மொட்டும் எதிர்பார்க்கிறது - சஜித்
Thursday, 23 Jan 2020

நான் ஜனாதிபதி ஆகுவதை மொட்டும் எதிர்பார்க்கிறது - சஜித்

21 August 2019 12:30 pm

தான் ஜனாதிபதி ஆகுவதை பார்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் மட்டுமன்றி முழு நாடுமே எதிர்பார்ப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் துணை தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சஜித் பிரேமசாத நேற்று (20) ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தன்னுடன் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடலில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொட்டின் உறுப்பினர்கள் இவ்வாறு தன்னுடன் கலந்துரையாடுகிறார்கள் என்றால் தனக்கு கிடைக்க கூடிய வெற்றி எத்தகையது என சிந்தித்து பாருங்கள் என சஜித் சுட்டிக்காட்டியுள்ளார்.

தன்னை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிடுவது சுப நேரத்தில், சரியான காலத்தில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

KK