தெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த!
Wednesday, 20 Jan 2021

தெரண தலைவரை திட்டி தீர்த்த மஹிந்த!

21 August 2019 11:07 am

தெரண மீடியா நெட்வேர்க்கின் தலைவரான திலித் ஜயவீர, கோட்டாபய  ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பராவதுடன், அவரது அரசியல் திட்டத்தின் உயர் மட்ட உறுப்பினருமாவார்.

சிலரின் கூற்றுப்படி, இப்போது  கோதபய ராஜபக்ஷ தனது வார்த்தையால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் திலித் ஜயவீர மட்டுமே.

இதற்கமைய, இந்த நாட்களில் திலித் ஜயவீர கோதபய ராஜபக்ஷ வீட்டில் அடிக்கடி காணக்கூடிய கதாபாத்திரம்.

இருப்பினும் கடந்த நாள் ஒன்றில் இவ்வாறே திலித் ஜயவீர வந்திருப்பதை கண்ட மஹிந்த ராஜபக்ஷ அனைவருக்கும் முன்னால்  திடீரென அவரை திட்ட  தொடங்கிவிட்டார். அவரை திட்டியதற்கான காரணமோ அருமையானது.

"ஓ, நீ இப்போ பேப்பர்  ஆரம்பிச்சிட்டல? ஆனா எனக்கு பேப்பர் ஒன்னு அனுப்ப முடியாது? நீ மத்த எல்லாத்துக்கும் பேப்பர் அனுப்புற எனக்கு மட்டும் தான் நீ பேப்பர் அனுப்ப மாட்டேன்ற. என்ன ஓய் இதுக்கு அர்த்தம்" என மஹிந்த ராஜபக்ஷ திலித் ஜயவீரவை தொடர்ச்சியாக திட்டி தீர்த்துள்ளார்.

தெரண நிறுவனம் " அருண" எனும் பெயரில் பத்திரிக்கை ஒன்றை ஆரம்பித்தது சில மாதங்களுக்கு முன்பாகும். வார இறுதி செய்தி தாள் என்பதால் இதன் விலை 100 ரூபாவாகும். மஹிந்த ராஜபக்ஷ 100 ரூபாய்க்காக யாரையும் திட்டி தீர்க்கக்கூடியவர் அல்ல.

விசேடமாக தனது சொந்த கட்சிக்கு அதிக விளம்பரங்களை வழங்கும்  இலங்கையின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான தெரண நிறுவனத்தின் தலைவரை ஒரு 100 ரூபாவிற்காக பிரசித்தியில் முகத்திற்கு திட்டி தீர்க்க வேண்டிய அவசியம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு இல்லை.

கோதபய ராஜபக்ஷவின் அரசியல் திட்டத்தின் காரணமாக இது நிகழ்ந்ததா என்பது அவர்கள் இருவருக்கு மட்டுமே தெரியும்.

க.கி