தாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது
Monday, 01 Jun 2020

தாக்குதல் நடத்தப்பட 16 மணி நேரத்திற்கு முன்னர் தகவல் கிடைத்தது

21 August 2019 09:42 am

தாக்குதல் நடத்தப்பட 16 மணி  நேரத்திற்கு முன்னதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி தாக்குதல் நடத்தப்படுவதற்கு முன்னதாக தாக்குதல் பற்றி நிச்சயமான தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தது என தெரிவித்துள்ளது,

தாக்குதல் பற்றி ஆய்வு செய்பப்படாத ஆரம்ப தகவல்கள் மட்டுமே கிடைக்கப் பெற்றது என சில அதிகாரிகள் கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது.

20ம் திகதி மாலை வேளையில் தாக்குதல் பற்றிய தகவல்கள் கிடைக்கப்பெற்றிருந்தது எனவும் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.