பெசில் எங்கே? தேடித் தருவோருக்கு பரிசு
Wednesday, 20 Jan 2021

பெசில் எங்கே? தேடித் தருவோருக்கு பரிசு

21 August 2019 09:35 am

கோதபாய ராஜபக்சவை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிப்புச் செய்யப்பட்ட 11ம் திகதியின் பின்னர் கோதபாய ராஜபக்சவை காணவில்லை.

கோதபாய ராஜபக்சவின் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் பெசிலை காணக்கிடைக்கவில்லை.

மாநாடு நடைபெறுவதற்கு முன்னதாக ஒரே வாரத்தில் இரண்டு ஊடக சந்திப்புக்களை நடத்தி மிகவும் செயற்பாட்டு ரீதியாக இயங்கி வந்த பெசில், கடந்த ஒன்பது நாட்களாக மௌனம் காத்து வருகின்றார்.

தனது சகோதரரான கோதபாயவின் கன்னி பிரச்சார கூட்டத்தில் இணைந்து கொள்ள முடியாது அதனை விடவும் மிக முக்கியமான பணி ஏதேனும் உண்டா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதேவேளை, இந்த எட்டு நாள் பிரச்சாரத்தில் பாரிய நன்மைகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இதனைப் புரிந்து கொண்டே பெசில் பின்வாங்குவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.